
விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதிக்கு உட்பட்ட நடுவனந்தல் கிராம தலைவர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் ந. செந்தில் இலவச வீட்டு மனை பட்டா கோரி சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அவர் அளித்த மனுவில் மயிலம் தொகுதிக்கு உட்பட்ட நடுவனந்தல் கிராமத்தில்
85 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் வீடு இன்றி வீட்டு மனை பட்டா இன்றி குடிசையில் வாழ்ந்து கொண்டு பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களாகவே ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர் என மனு கொடுத்துள்ளோம்.அரசுக்கு சொந்தமான 47/3A சர்வே எண் கொண்ட புறம்போக்கு நிலம் உள்ளது எனவே ஐயா அவர்கள் எங்கள் கிராமத்தில் ஆய்வு செய்து இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுப்பவருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஐயா அவர்களை பணிவுடன் கேட்டுக் கொள்வதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
CholaTimes.com
தமிழனின் குரல் உண்மை யின் காலம்
🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற
🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்