செய்தி படம் : செஞ்சி சிறுவாடி காப்பு காட்டில் எலும்புகள் கண்டெடுப்பு

செய்தியாளர்: கோட்டை

RS. சரவணன்

செஞ்சி அருகே சிறுவாடி காப்பு காட்டில் கிடைத்த எலும்புகளை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலமுண்டியில் காணாமல் போன சிறுமியை தேடி வரும் போலீசார் நேற்று முன்தினம் சிருவாடி காப்புக்காட்டு பகுதியில் முள்தோப்பில் எலும்புகளை கண்டுபிடித்தனர் எலும்புகள் அருகே சட்டை கைலி செருப்பு உள்ளிட்டவைகள் இருந்தன இதை அடுத்து சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர் அதில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரை அடுத்த கத்தாழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் வயது 74 கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி காணாமல் போனது தெரிய வந்தது அதனை தொடர்ந்து அவரது மகன் பிரபு மற்றும் குடும்பத்தினரிடம் சட்டை கைலி செருப்பு ஆகியவற்றை காண்பித்து அவர்கள் அதைப் பார்த்து அது சங்கருடைய உடைகள் என்று தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து எலும்புகளின் டி என் ஏ மற்றும் குடும்பத்தினர் டி என் ஏ ஒன்றாக உள்ளதா என ஆய்வுக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்தனர் அதன் முடிவுகள் வந்த பின்னரே அந்த எலும்புகள் சங்கருடையது தானா என்பது உறுதி செய்யப்படும்

cholatimes.com  Breaking news

24×7

தமிழனின் குரல் உண்மையின் காலம்

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error: Content is protected !!