{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}
செய்தி படம்: மயிலம் முருகன் கோவிலில் நடைபெற்ற வெகு விமர்சையான சூரசம்ஹாரம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

மயிலம் பொம்மபுர ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 10ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

விழாவின் ஒவ்வொரு நாளும் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகப் பொடி, மஞ்சள், சந்தனம், பால், தேன், பழ வகைகள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

விழாவின் ஆறாம் நாளான சூரசம்ஹார தினத்தன்று உற்சவர் ஸ்ரீ சண்முகர் தங்கக் கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீரபாகு தேவர் வெள்ளிக் கவசத்தில் மலர் அலங்காரத்துடன் காட்சியளித்தார்.

தொடர்ந்து பஞ்சமுக தீபாராதனை, நட்சத்திர தீபம், கும்ப தீபம் உள்ளிட்ட பல்வேறு தீபாராதனைகளும், ஷோடச உபசார பூஜைகளும் நடைபெற்றன. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சண்முகர் வள்ளி, தெய்வானை சமேதராகவும், வீரபாகு தேவரும் கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதன் முக்கிய நிகழ்வாக இரவு பாலசித்தர் சன்னதியில் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ சண்முகர் முன்னிலையில் கோயில் வளாகத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கிரிவலம் மற்றும் திருக்கல்யாண உற்சவத்திற்கான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ஆம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

இவ்வாறு கந்த சஷ்டி விழா பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

cholatimes.com  Breaking news

24×7

தமிழனின் குரல் உண்மையின் காலம்

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!