செய்தி படம்: செய்திக்காக உருவாக்கப்பட்டது(Ai)

விழுப்புரம் மகாராஜபுரம் லட்சுமி நகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் பைக்கைத் திருட முயன்ற நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மகாராஜபுரம் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், நவம்பர் 19ஆம் தேதி அதிகாலை சுமார் 6 மணியளவில் அரைக்கால் டவுசர் அணிந்து, கையில் இரும்பு ராடுடன் வந்த மர்ம நபர் ஒருவர் பைக்கின் பூட்டை உடைத்து திருட முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கவனித்த அப்பகுதியினர் உடனடியாக வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் அந்த நபரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே, அந்த நபர் வீட்டின் உரிமையாளரைத் தாக்கி மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் நகர போலீசார், அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள துரைசாமிபுரத்தைச் சேர்ந்த சுப்புராஜ், 26, என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

விழுப்புரத்தில் அதிகாலை நேரத்தில் இரும்பு ராடுடன் வந்து பைக்கைத் திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHOLATIMES.com – தமிழனின் குரல், உண்மையின் காலம்.

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!