செய்தி படம் : தமிழக வெற்றிக்கழக கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி எஸ் பாபு உடல் நலக்குறைவால் காலமானார்

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு காலமானார்!

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ். பாபு (75), உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

நீண்டகால சுவாசப் பாதிப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் அடங்கிய பல்துறை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

70 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 2.24 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு தமிழக அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Cholatimes.com Breaking news

24×7

தமிழனின் குரல் உண்மையின் காலம்

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!