
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசுப் பள்ளியில் 9 மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக எழுந்த புகாரில், பள்ளித் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதூர் அருங்குறுக்கை கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் திருவிக்ரமன் (59).
இவர் பள்ளியில் பயிலும் 3, 4 மற்றும் 5-ம் வகுப்புகளைச் சேர்ந்த 9 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவிகள் தங்களது பெற்றோரிடமும், பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்களிடமும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, தலைமை ஆசிரியர் திருவிக்ரமனை பணியிடை நீக்கம் செய்தனர்.
இதற்கிடையே, மாணவிகளின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு, தலைமை ஆசிரியரை நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் திருவிக்ரமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
CHOLATIMES.com – தமிழனின் குரல், உண்மையின் காலம்.
🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற
🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்