{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}

செய்தி படம்:சென்னை கண்ணகி நகரில் போதைப்பொருள் வேட்டைபோதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்!– 5 பெண்கள் கைது!

சென்னை கண்ணகி நகர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை OMR, ECR, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் உள்ளிட்ட 10 இடங்களில் இன்று அதிகாலை முதல் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.

பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கண்ணகி நகர் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற சோதனையில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக 5 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருட்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன? இதன் பின்னணியில் செயல்படுபவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் நடைபெற்ற இந்த அதிரடி சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cholatimes.com Breaking news

24×7

Tamilanin Kural

unmaiyin Kaalam

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!