
திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்து – 9 பேர் படுகாயம்!
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த நல்லமூரில் இருந்து கருங்குழி நோக்கி ஆட்டோவில் கூலி வேலைக்குச் சென்ற 9 பேர் சாலை விபத்தில் படுகாயமடைந்தனர்.
நல்லமூரைச் சேர்ந்த விஜயகுமார் (சுமார் 42) என்பவர் ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த 8 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 9 பேர் பயணம் செய்துள்ளனர்.
இவர்கள் கருங்குழி பகுதியில் சவுக்கு மிலார்கழிக்கும் கூலி வேலைக்குச் செல்வதற்காகப் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆட்டோ திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், காலை சுமார் 7.30 மணியளவில் சாரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஆட்டோ மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில் நிலைதடுமாறிய ஆட்டோ தூக்கி வீசப்பட்டு சாலையோரப் புதரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 9 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் போலீசார் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படும் அடையாளம் தெரியாத வாகனம் குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
.cholatimes.com Breaking news
24×7 “!தமிழனின் குரல் உண்மையின் காலம்!
🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற
🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்
