செய்தி படம்: தீ விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி குடியரசு துவக்கி வைத்த மாவட்ட தீயணைப்பு அலுவலர்

விழுப்புரம் மாவட்டம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டிவனத்தில் திண்டிவனம் நண்பர்கள் அரிமா சங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் இணைந்து நடத்தும் தீ விபத்தில் தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரம் திண்டிவனம் நேரு வீதி மேம்பாலம் அருகில் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் அணிவகுத்து செல்ல புனித அன்னாள் மேல்நிலை பள்ளி என்சிசி மாணவர்கள் மற்றும் மான்ஃபோர்ட் மேல்நிலைப்பள்ளி ஏ ஆர் சி மாணவ, மாணவிகள் தீ விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரச்சார துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பேரணியாக நேரு வீதி வழியாக சென்றனர் இந்த ஊர்வலமானது காந்தி சிலை அருகில் முடிவடைந்தது. பொதுநலன் கருதி துண்டு பிரசுரங்களை லயன் கேபிஎன் ரமேஷ், லயன் பால விக்னேஷ் ஆகியோர் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் திண்டிவனம் தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர்கள், காவல் துறையினர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!