விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயத்தில் 9-ம் ஆண்டு நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இதன் 10-ம் நாளை முன்னிட்டு, மூலவர் மற்றும் உற்சவர் அம்மன் வண்ண மலர்கள் கொண்டு ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி அம்மனாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து மைய மண்டபத்தில் காட்சியளித்த ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு மகாதீபாராதனை, பஞ்சமுக தீபாராதனை, கும்ப தீபம், நட்சத்திர தீபம், சோடச உபச்சாரம் மற்றும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து உற்சவர் அம்மன் ஸ்ரீ திரௌபதி அம்மன் திடலில் எழுந்தருளி, யானை, சிங்கம் உள்ளிட்ட நான்கு உருவங்களில் வந்த சூரனை சம்ஹாரம் செய்தார். இறுதியில் சேவல் உருவில் வந்த மகிஷாசுரனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற
🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்
