{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
செய்தி படம்: தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவில்

செய்தியாளர் ஆசிரியர்

G.Duraicholan:9894518927

விழுப்புரம் மாவட்டம் | திண்டிவனம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தீவனூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் திருக்கோவிலில், ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன.

விழாவையொட்டி, விநாயகப் பெருமானுக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், தேன் மற்றும் பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு புனிதப் பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து யாகசாலை வேள்வி நடத்தப்பட்டு, பூஜிக்கப்பட்ட கலசங்கள் கோவில் உட்பிரகாரத்தில் வலம் கொண்டுவரப்பட்டன. இதனைத் தொடர்ந்து 108 சங்காபிஷேகம் மற்றும் கலச நீரால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தி விஷ்ணு கணபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் உற்சவமூர்த்தி கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்து, பக்தர்களின் “ஓம் விநாயகா போற்றி” என்ற பக்தி முழக்கங்களுக்கிடையே ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் தீவனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு சுயம்பு பொய்யாமொழி விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அருளாசி பெற்றனர். விழா நிறைவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

CHOLATIMES.com
தமிழனின் குரல், உண்மையின் காலம்.

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error: Content is protected !!