செய்தி படம் சந்தன அபிஷேகம் பால் அபிஷேகம்

திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்:

திண்டிவனம் அடுத்த ஆலகிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் திருக்கோவிலில், ஐப்பசி மாத சுக்கிர வார பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கு அபிஷேகப்பொடி, பால், தயிர், நெய், தேன், சந்தனம், பன்னீர், இளநீர், திருநீறு உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து நந்திகேஸ்வரர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், திரிபுரசுந்தரி அம்மன் மற்றும் எமதண்டீஸ்வரர் சுவாமிகளுக்கு பல்வேறு வகையான தீபாராதனைகள் செய்யப்பட்டன.

இந்தப் பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து இறையருள் பெற்றனர்.

CHOLATIMES.com – தமிழனின் குரல், உண்மையின் காலம்.

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error: Content is protected !!