செய்தியாளர் ஆசிரியர்G. Duraicholan:9894518927

மேல்மருவத்தூர்:
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் உள் அரங்கில் 38-வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரியின் தாளாளர் முனைவர் கோ.ப. செந்தில்குமார் மற்றும் தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் புவனேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் ராஜா, புல முதன்மையர் முனைவர் ராமசாமி, துணை முதல்வர் முனைவர் புவனேஸ்வரி, நிர்வாக அலுவலர் சதானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏப்ரல்–மே 2026 தேர்வு முடிவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிறப்பான சாதனை படைத்துள்ளனர். பல்வேறு தரவரிசைகளில் இடம்பெற்ற 11 மாணவர்களில், மூன்று மாணவர்கள் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சிறப்புத் தகுதிச் சான்றிதழ்களை அமைச்சர் ராஜ்குமார் மற்றும் ஆதிபராசக்தி கல்வி, மருத்துவம் மற்றும் பண்பாட்டு அறநிலையத் துறையின் துணைத் தலைவர் முனைவர் கோ.ப. செந்தில்குமார் ஆகியோர் வழங்கிப் பாராட்டினர்.
மேலும், இளநிலைப் பிரிவில் 201 மாணவர்களும், முதுநிலைப் பிரிவில் 92 மாணவர்களும் என மொத்தம் 293 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இவர்களில் 56 பேர் சிறப்புத் தகுதியும், 207 பேர் முதல் வகுப்பும், 30 பேர் முதல் வகுப்பு சிறப்புத் தகுதியும் பெற்றுள்ளனர்.
மாணவர்களின் இந்தக் கல்விச் சாதனையைப் பாராட்டி கல்லூரி நிர்வாகம், முதல்வர், புல முதன்மையர், துணை முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் உதவிப் பேராசிரியர் ராஜிவ் காந்தி நன்றியுரை ஆற்றினார்.
Cholatimes.com
தமிழனின் குரல் உண்மை என் காலம்
🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற
🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்
