
News by :
Kottai RS.Saravanan
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் தேதி சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு, செஞ்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படியும், செஞ்சி காவல் ஆய்வாளர் மேற்பார்வையிலும், செஞ்சி பேருந்து நிலையத்தில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் தேசிய ஒற்றுமை தினத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு காட்சிகள் பொதுமக்களின் பார்வைக்கு ஒளிபரப்பப்பட்டன.
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
சோழா டைம்ஸ் செய்திகளுக்காக செஞ்சியிலிருந்து… செய்தியாளர் கோட்டை RS.சரவணன்
CholaTimes.com:9894518927
தமிழனின் குரல் உண்மை என் காலம்
🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற
🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்