செய்தி படம்: டெல்லி போலீசாரால் கைப்பற்ற கோலி நாணயங்கள்

டெல்லியில் போலி 20 ரூபாய் நாணயங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்து மொத்தமாக கடத்த முயன்ற பெரும் கும்பலை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கடத்தலை முறியடித்துள்ளனர். முண்ட்கா மெட்ரோ நிலையம் அருகே காரில் 5000 போலி நாணயங்களை கடத்திச் சென்ற பராஸ் ஜெயின் என்பவர் முதலில் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் பேரில், மொகாலியைச் சேர்ந்த உப்கர் லூத்ரா, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அனுராக் பால் மற்றும் பீகாரைச் சேர்ந்த ஜனார்தன் சௌராசியா ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஹரியானா சோனிபட்டில் இருந்து சஹாரன்பூருக்கு தயாரிப்பு கூடத்தை மாற்ற முயன்றபோது சிக்கினர். 1 லட்சம் முக மதிப்புள்ள நாணயங்கள் 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு கைது செய்து அவர்கள் போலியாக தயாரித்த 20 ரூபாய் நாணயங்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

–

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!