
உழவர்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம்!
நுண்ணுயிர் வளர்ப்பு | காளான் உற்பத்தி | தேனீ வளர்ப்பு
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், சிறுவாடி முருக்கேரியில் உழவர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் பாபுராயன்பேட்டையில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். வேளாண்மை அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் முருக்கேரி ஆடவல்லீஸ்வரர் உழவர் உற்பத்தி நிறுவனம் இணைந்து இந்தப் பயிற்சி முகாமை நடத்தினர்.
இதில் கல்லூரிப் பேராசிரியர்கள் விவசாயிகளுக்கு பல்வேறு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து சிறப்புப் பயிற்சி அளித்தனர்.
முனைவர் ராவணச்சந்தர் நுண்ணுயிர் பயிர் வளர்ப்பு குறித்தும், முனைவர் ராஜேஸ்வரி காளான் உற்பத்தி மற்றும் வளர்ப்பு முறைகள் குறித்தும் விளக்கமளித்தனர்.
தொடர்ந்து முனைவர் கார்த்திகேயன் கால்நடை மேலாண்மை குறித்தும், முனைவர் முருகன் தேனீ வளர்ப்பு முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவான பயிற்சி அளித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உழவர் உற்பத்தி நிறுவனத் தலைவர் அருணாச்சலம், தலைமை நிர்வாக அதிகாரி மணிகண்டன் மற்றும் இயக்குநர் குழுவினர் செய்திருந்தனர்.
எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர் குழுவினரும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
இந்தப் பயிற்சி முகாமில் சிறுவாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்துப் பயிற்சி பெற்று பயனடைந்தனர்.
🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற
🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்
