தமிழக தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் POCSO வழக்குகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையிலும், விரைந்து நீதி வழங்கும் வகையிலும் தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் மிக முக்கிய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்!
அதன்படி, POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்) வழக்குகளை விரைவாக விசாரித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடி நீதி கிடைக்க, 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த புதிய நீதிமன்றங்கள் அமைக்க ₹46.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 22 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 4 நீதிமன்றங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளன. இதனுடன் சேர்த்து மொத்தம் 52 சிறப்பு நீதிமன்றங்கள் தமிழகத்தின் 47 காவல் மாவட்டங்களிலும் செயல்படும்!
மேலும், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் NDPS (போதைப்பொருள் தடுப்பு சட்டம்) வழக்குகளுக்காக 4 புதிய சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட உள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழக அரசு எப்போதும் முன்னோடியாக இருக்கும் என தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தெரிவித்துள்ளார்.