
சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜக இளைஞர் அணி மாவட்ட தலைவர்– TNK. பிரபு வலியுறுத்தல்!
செய்தி குறிப்பில் தமிழகம் முழுவதும் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட நேரு வீதியில் உள்ள அனைத்து நடைபாதை ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனம் நேரு வீதியில் நடைபாதைகள் பல்வேறு வகைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நடைபாதையில் பாதுகாப்பாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதசாரிகள் சாலையில் இறங்கி நடக்க வேண்டிய சூழல் உருவாகி, போக்குவரத்து நெரிசலும் விபத்து அபாயமும் அதிகரிக்கிறது.
எனவே, அதிகாரிகள் பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்:
🔹 நேரு வீதியில் உள்ள அனைத்து நடைபாதை ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும்.
🔹 நடைபாதைகளில் வணிகப் பொருட்கள் வைப்பது மற்றும் கடைகளை விரிவுபடுத்துவதைத் தடுக்க வேண்டும்.
🔹 நடைபாதைகளை வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.
🔹 முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தடையின்றி நடந்து செல்லும் வகையில் நடைபாதைகளை மீட்டெடுக்க வேண்டும்.
🔹 ஆக்கிரமிப்புகள் மீண்டும் ஏற்படாத வகையில் நகராட்சி நிர்வாகம் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
எச்சரிக்கை: நடைபாதை என்பது தனிநபர்களின் ஆக்கிரமிப்புக்கான இடமல்ல; அது பொதுமக்களின் அடிப்படைப் பயன்பாட்டிற்கான பொதுவழி. வணிக நலனைவிட பொதுமக்களின் உயிர் பாதுகாப்பும் பாதசாரிகளின் உரிமையும் முக்கியமானவை.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் நோக்கத்தை உணர்ந்து, திண்டிவனம் நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற
🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்