
மதுரை பரவை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை, மர்ம நபர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பரவை மேலத்தெரு, நான்காவது தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (25). கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவருக்கு தாரணி என்ற மனைவியும், ஆண் குழந்தையும் உள்ளனர்.
தாரணியின் தந்தை செந்தில்குமாருக்கும், அவரது சகோதரர் சிவகுமாருக்கும் இடையே பூர்வீக வீட்டை யாருக்கு சொந்தமாக்குவது என்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த செப்டம்பர் மாதம் பனையூரில் நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் சந்தோஷ், சிவகுமாரை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்து காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சந்தோஷின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயநல்லூர் போலீசார் உடலைக் கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினார்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு CHOLATIMES.com இணையதளத்தைப் பின்தொடருங்கள்.
தமிழனின் குரல் உண்மையின் காலம்.சோழா டைம்ஸ்
🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற
🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்
