{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}
செய்தி படம்: திருப்பரங்குன்றம் தீபத்தூன் விவகாரம்! தீபம் ஏற்ற அனுமதித்தது உச்ச நீதிமன்றம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, வரும் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று மட்டும் தீபத்தூணில் ஒருமுறை தீபம் ஏற்ற இடைக்கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

உச்சநீதிமன்றம் விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள்:

* கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தீபம் ஏற்றச் செல்ல வேண்டும்.

* பொதுமக்களுக்கு தீபத்தூண் பகுதிக்குச் செல்ல அனுமதி இல்லை.

* மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் தொல்லியல் துறையினர் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

* தர்கா மற்றும் மசூதியில் நடைபெறும் வழக்கமான வழிபாடுகளுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது.

* தொல்லியல் நினைவுச் சின்னங்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படக்கூடாது.

மேலும், இந்த ஓராண்டுக்கான அனுமதியை எதிர்காலத்தில் பாரம்பரிய வழிபாட்டு உரிமைக்கான ஆதாரமாகக் கருத முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழா முடிந்த மூன்று நாட்களுக்குள் உத்தரவு செயல்படுத்தப்பட்டது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 2027 ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ளது.

Cholatimes.com Breaking news

24×7

தமிழனின் குரல் உண்மையின் காலம்

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error: Content is protected !!