
செய்தி படம்: டொனால் ட்ரம்ப்,- விளாடிமிர் புதின் சீனாவில் நேரடி சந்திப்பு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் – புதின் சந்திப்பு! சீனாவில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை!
ரஷ்யா – உக்ரைன் இடையே நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இன்று சீனாவின் ஷென்ஷென் நகரில் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் நடைபெறும் இந்த முத்தரப்பு சந்திப்பில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
டிரம்ப் – புதின் இடையேயான தனிப்பட்ட சந்திப்பிலும் உக்ரைன் போர் விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர்நிறுத்தம், உக்ரைனின் எதிர்காலப் பாதுகாப்பு, ரஷ்யாவின் பிராந்தியக் கோரிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்தச் சந்திப்பில் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் போருக்குப் பிந்தைய பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பாக அமெரிக்கத் தூதர்கள் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளுடன் ஜெர்மனியின் பெர்லினிலும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இருப்பினும், இந்தச் சந்திப்பில் போர் முடிவுக்கான ஒப்பந்தம் எட்டப்படுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள டிரம்ப் – புதின் சந்திப்பு உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் எழுந்துள்ளது.
🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற
🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்
