
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
குல்காம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி மத்திய ரிசர்வ் காவல் படையான சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் மூன்று வீரர்கள் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் தொடர்புடையவர்களைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நவம்பர் 16ஆம் தேதி லாரூ பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உமர் நிசார் தார் என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
தொடர்ந்து தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கியத் தளபதியான முகமது லத்தீப் பட், குல்காம் மாவட்டம் ஜங்கல்போரா பகுதியில் உள்ள மசூதிக்குள் பதுங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
அவரை சரணடையுமாறு பாதுகாப்புப் படையினர் பலமுறை வலியுறுத்தினர். காவல்துறை அதிகாரிகள் காணொளி அழைப்பு மூலமாகவும் பேச்சுவார்த்தை நடத்தி சரணடைய அறிவுறுத்தினர்.
ஆனால் அவர் சரணடைய மறுத்து பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து நடைபெற்ற என்கவுன்டரில் லத்தீப் பட் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதன் மூலம் சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட லஷ்கர் அமைப்பின் இரு முக்கிய பயங்கரவாதிகள் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் கொல்லப்பட்டுள்ளனர்.
குல்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
cholatimes.com Breaking news
24×7
Tamilan in Coral
unmaiyin Kaalam
🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற
🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்
