செய்தி படம்:பட்டாசு கடையில் பயங்கர வெடி!
7 பேர் படுகாயம்!
2 பேர் கவலைக்கிடம்!

தமிழகத்தில் அடுத்தடுத்து பட்டாசு கடைகளில் பயங்கர தீ விபத்து!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவில் நேற்று மாலை பட்டாசு கடையில் திடீரென தீப்பிடித்து பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் உடல் கருகி படுகாயம் அடைந்தனர். அதில் 2 பேர் 80 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.

அதேபோல் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்திலும் இன்று அதிகாலை பட்டாசு கிடங்கியில் தீ விபத்து ஏற்பட்டு 4 பேர் காயமடைந்தனர்.

பண்ருட்டியில் உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் பட்டாசுகளை அடுக்கி வைக்கும் போது திடீரென தீப்பிடித்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென பட்டாசுகள் வெடிக்க தொடங்கின. கடையில் இருந்த 7 பேர் தீயில் சிக்கினர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். காயமடைந்த 7 பேரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் 2 பேர் 80 சதவீத தீக்காயத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேரில் விசாரணை நடத்தினார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ENDING:

இது போன்ற உண்மையான உடனுக்குடனான செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் http://CHOLATIMES.COM – தமிழனின் குரல், உண்மையின் காலம்!

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error: Content is protected !!