
திண்டிவனம் | 04.11.2026*
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா இன்று திண்டிவனம் அருள்மிகு திந்திறீஸ்வரர் கோயில் எதிரில் அமைந்துள்ள NBC மஹாலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு அவர்களிடம், விழுப்புரம் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி மாவட்ட தலைவர் TNK.பிரபு புகார் மனு ஒன்றை அளித்தார்.
*மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:*
திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் எதிரில் சர்வே எண் 5/59/2B-ல் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்.
கட்டிட அனுமதி, நகராட்சி விதிமுறைகள் மற்றும் கட்டிட வரைபட அனுமதி ஆகியவை முறையாகப் பெறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், கட்டிட அனுமதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வரைபடத்தின் அடிப்படையில் தான் கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறதா, நகராட்சி சொத்து வரி மற்றும் வருவாய் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளதா, சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் http://W.P.No.39042 of 2024 மற்றும் http://W.P.No.17011 of 2024 ஆகிய வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையும் மனுவில் குறிப்பிட்டு, சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திண்டிவனம் நகராட்சியில் கட்டிட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்து, பொதுமக்களின் நலன் மற்றும் நகராட்சி வருவாயைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் TNK.பிரபு தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Cholatimes.com
தமிழனின் குரல் உண்மையின் காலம்
🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற
🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்