{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி படம்: வடகிழக்கு பருவ மழை தீவிரம்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 5) வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகம் மேல் 0.9 கி.மீ உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

*இன்று (நவம்பர் 5) எங்கெங்கு கனமழை?*

இன்று தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

*சென்னை வானிலை நிலவரம்:*

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும்.

*நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை:*

நாளை (நவம்பர் 6) தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

*தீபாவளி அன்றும் கனமழை – 10 மாவட்டங்களுக்கு அலர்ட்:*

நவம்பர் 8-ம் தேதி தீபாவளி அன்று தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை மழையுடன் கொண்டாடப்படும் என தெரிகிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை.

Cholatimes.com

தமிழனின் குரல் உண்மையின் காலம்

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!