CHOLATIMES.com – பிரேக்கிங் நியூஸ்

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோட்டத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் செயற்பொறியாளர் சிவசங்கரன் தனது செய்தி குறிப்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வரும் அக்டோபர் 22ஆம் தேதி வியாழக்கிழமை மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதன்படி, காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
திண்டிவனம் நகரம் முழுவதும், சென்னை சாலை, மயிலம் ரோடு, ஜெயபுரம், காவேரிப்பாக்கம், செஞ்சி சாலை, சந்தைமேடு, வசந்தபுரம், அய்யந்தோப்பு, முருங்கப்பாக்கம், கிளியனூர், உப்புவேலூர், சலவாதி, சாரம், மேல்பேட்டை, கீழ்கூடலூர், எச்சேரி, ஒலக்கூர், எஸ்.கூடூர், பள்ளிப்பாக்கம், நல்லாத்தூர், கோணேரிக்குப்பம், பாதிரி, கூச்சிக்கொளத்தூர், ஓங்கூர், கரிக்கம்பட்டு, எப்பாக்கம், நொளம்பூர், அணணாவரம், மொளசூர், எறையனூர், எண்ணியூர், ஜக்காம்பேட்டை, கீழ்சித்தாமூர், தென்பசார், அன்னம்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின்தடை நாளானது தவிர்க்க இயலாத காரணம் ஏற்படும் பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் மின்தடையை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செய்தி: CHOLATIMES.com தமிழனின் குரல், உண்மையின் காலம்.
🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற
🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்