
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்கான அனுமதி ஆன்லைனில் மூலம் பெறப்பட்டு அந்தந்த பட்டாசு கடைகள் உள்ளன இடங்கள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இதனை தொடர்ந்து அந்த தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டிவனம் நகரப் பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் இடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், திண்டிவனம் வட்டாட்சியர் ஞானசவுந்தரி, வருவாய் அலுவலர் பிரபாகரன் மற்றும் சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தற்காலிக பட்டாசு கடைகள் அமைய உள்ள இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து அரசு நிபந்தனைகளின் படி அவைகள் சரியாக உள்ளனவா? பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு உள்ளது. தீத்தடுப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளனவா? உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.
🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற
🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்
