செய்தி படம்: ஆத்தூர் அருள்மிகு ஆனந்தபுரீஸ்வரர் ஆலய கார்த்திகை தீபதிருவிழா

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் ஆத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத அருள்மிகு ஆனந்தபுரீஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

இதையொட்டி, வரும் நவம்பர் 24-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6.05 மணிக்கு திருக்கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இதற்கான தீபக் கொப்பரை, நவம்பர் 21-ம் தேதி சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் திண்டிவனம் அருள்மிகு மரகதாம்பிகை சமேத திந்திரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, பல்வேறு பகுதிகள் வழியாக ஆத்தூர் சிவாலயத்தை வந்தடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவிற்குத் தேவையான எண்ணெயை பக்தர்கள் பணமாகவோ அல்லது எண்ணெயாகவோ வழங்கி ஒத்துழைக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், ஆத்தூர் அருள்மிகு ஆனந்தபுரீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற உள்ள திருப்பணிகளுக்கும் பக்தர்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இங்கனம், ஆலய நிர்வாகிகள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள்.

என்றும் இறைபணியில் சிவதேவராஜ்

Cholatimes.com. Breaking news

24×7

தமிழனின் குரல் உண்மையின் காலம்

🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற

🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்

Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error: Content is protected !!