
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரகன்நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலில் ராகு – கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் மகா அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஆலய வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, கும்ப கலசங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டன.
தொடர்ந்து யாக குண்டத்தில் பல்வேறு வகையான வாசனைப் பொருட்கள், திரவியங்கள் மற்றும் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு யாக வேள்வி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித கலசங்கள் கோயில் உட்பிரகாரம் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, ஸ்ரீ ராகு பகவான் மற்றும் கேது பகவானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் மற்றும் புனித கலச நீரைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராகு – கேது பகவானுக்கு பஞ்சமுக தீபாராதனை மற்றும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராகு – கேது பகவானை வழிபட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
🔔 CHOLA TIMES வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெற
🔴 YouTube-ல் SUBSCRIBE செய்யுங்கள்Bell Icon 🔔-ஐயும் அழுத்தவும்
