
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஊரல் கிராமம் பெருமாள் கோவில் சேர்ந்த ம.வசந்த் என்பவரின் மனைவி பார்கவி (27) இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த 28-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கர்ப்ப காலத்தில் குழந்தை நலமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் மருத்துவமனையில் மருத்துவர் உரிய நேரத்தில் வராமல் சுமார் 11 மணி நேரம் காக்க வைத்ததாகவும், பின்னர் பரிசோதித்த மருத்துவர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது போன்ற தவறு இனி வேறு யாருக்கும் நடக்கக்கூடாது எனவும், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இன்று (01/10/2026) திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் ராஜன்னிடம் ஒன்றிய கவுன்சிலர்கள் அண்ணாதுரை சிலம்பரசன் மற்றும் ஊர்பொதுமக்கள்11 பேரி கையெழுத்துட்டு புகார் மனு அளித்துள்ளார்.
இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

