
திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் அருகே விபத்து சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கிளியனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓமந்தூர் பாரதி மஹால் அருகே விபத்து.
சென்னை லஷ்மி நகர் கொளத்தூர் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த சர்க்கரை பாவா மகன் முகமது பாசில்(22) இவர் சென்னை அப்பல்லோ தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார் இந்நிலையில் 2/10/2026 அன்று சென்னையில் இருந்து தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு செல்ல டேவிட் தந்தை பெயர் ஜெட்சன் என்பவருக்கு சொந்தமான யமஹா எஃப் இஸட் டி என் 02 சிடி8501 என்ற எண் கொண்ட இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றார். இருசக்கர வாகனமானது திண்டிவனத்திலருந்து பாண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் காலை10.00 மணி அளவில் ஓமந்தூர் பாரதி மஹால் அருகே சென்று கொண்டிருந்தபோது முகமது பாசில் அவரது நண்பர்கள் சிலர் வெவ்வேறு இருசக்கர வாகனங்களில் முன்னே சென்று விட்டனர். இதனை அறியாத முகமது பாசில் தனக்கு பின்னால் நண்பர்கள் வருகிறார்களா என்று பார்ப்பதற்கு பின்னால் திரும்பி பார்த்துவிட்டு முன்பக்கம் பார்க்கும்போது நிலை தடுமாறி பக்காவாட்டில் இருந்த கட்டையில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,
அவருக்குப் பின்னால் அமர்ந்து வந்த ஆருண் தந்தை பெயர் சையத் முகமது என்பவருக்கு பலத்த அடிபட்டு காயங்களுடன் இருந்தவரை நண்பர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார் இவர் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் பலியான முகமது பாசில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு கிளியனூர் போலீஸாரால் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

