
வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்துதவெக தலைவர் ஜோசப் விஜய் தீவிர வாக்கு சேகரிப்பு
தாராபுரத்தில் நடை பெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர் சத்திய பாமா ஆதரித்துCM. ஜோசப் விஜய் பிரச்சாரத்தை இவ்வாறாக தொடங்கினார்.
“என் நெஞ்சில் குடியிருக்கும் தாராபுரம் சொந்தங்களே!”
நான் இங்கே முதலமைச்சரா வரல… உங்க வீட்டு பிள்ளையா வந்திருக்கேன்!
இது கொங்கு மண் சார்! உழைப்பின் மண்! வீரத்தின் மண்! இந்த மண்ணை தொட்டு வணங்குறேன்!
நான் கேட்குறேன்…
4 மாசத்துக்கு முன்னாடி என்ன சொன்னாங்க? இவங்க சினிமாக்காரங்க, ஆட்சி பண்ண தெரியாதுனு சொன்னாங்க!
இன்னைக்கு என்ன பண்ணோம்?
- 700 டாஸ்மாக் கடையை மூடினோம் – இது தாய்மார்களுக்கான ஆட்சி!
- 13 லட்சம் விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி பண்ணோம் – இது விவசாயிக்கான ஆட்சி!
- 200 யூனிட் மின்சாரம் இலவசம், நெல்லுக்கு விலை உயர்வு, பாலுக்கு 6 ரூபாய் உயர்வு – இது உழைப்பாளிக்கான ஆட்சி!
இது ஊழல் இல்லாத ஆட்சி! லஞ்சம் இல்லாத ஆட்சி!
எதிர்கட்சிகள் என்ன சொல்றாங்க?
அவங்க கூட்டணி போட்டு, பணத்தை வச்சி ஜெயிக்கலாம்னு நினைக்கிறாங்க!
ஆனா இங்க இருக்குறது என் மக்கள்! QR Code-ஐ வச்சி கூட உங்களை தடுக்க முடியல! தடுப்பை தாண்டி வந்திருக்கீங்க! இந்த அன்பை எந்த QR Code-ஆலும் தடுக்க முடியாது!
தாராபுரம் மக்களே!
உங்க தொகுதி பெயரே தர்மபுரம்! தர்மம் எப்பவும் ஜெயிக்கும்!
நம்ம வேட்பாளர் சத்தியபாமா! பேர்லயே சத்தியம் இருக்கு! சத்தியத்தின் பக்கம் நில்லுங்க! இந்த கொங்கு மண் சத்தியத்தின் பக்கம் நிற்கும்!
வர்ற 6-ம் தேதி… நம்ம சின்னத்துக்கு வாக்களிங்க! தமிழகத்தின் தலையெழுத்தை மாத்துங்க! நன்றி வெற்றி நமதே இவ்வாறாக உரையாற்றினார்.


