மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தபால் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் செய்திருந்தது.
இதற்காக 8 குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரிக்கப்பட்டன.
மதுராந்தகம் தொகுதியில் தகுதி பெற்ற 931 பேரில் 893 பேர் தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

