தாராபுரத்தில் இன்று மாலை3.00 மணி அளவில் முதல்வர் விஜய் பிரம்மாண்ட பிரச்சாரம்

தாராபுரத்தில் இன்று மாலை3.00 மணி அளவில் முதல்வர் விஜய் பிரம்மாண்ட பிரச்சாரம்


தாராபுரத்தில் இன்று முதல்வர் விஜய் பிரமாண்ட பிரசாரம்! 5,000 பேருக்கு மட்டும் அனுமதி – 3,500 போலீஸ் குவிப்பு

த வெக தலைவர் CM. ஜோசப் விஜய் மாலை 3.00 மணி அளவில் பரப்புரை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சத்யபாமா, திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என 5 முனை போட்டி நிலவுகிறது.

தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய் இன்று (செப்டம்பர் 30) தாராபுரத்தில் பிரசாரம் செய்கிறார்.

தாராபுரம் – உடுமலை சாலையில் உள்ள மாருதி நகர் பகுதியில் சுமார் 54 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட திடல் அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு பிரசாரம் நடைபெறுகிறது.

பாதுகாப்பு காரணமாக QR குறியீடு கொண்ட அனுமதிசீட்டு பெற்ற 5,000 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். அனுமதி இல்லாதவர்கள் TV மற்றும் சமூக ஊடக நேரலையில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு தாராபுரம் முழுவதும் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை முதலே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.



error: Content is protected !!