
சென்னை மாணவர்களுக்கு ஹெல்மெட்டுடன் இலவச சைக்கிள்! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் BIS தரச் சான்று பெற்ற ஹெல்மெட் மற்றும் குடிநீர் பாட்டிலுடன் கூடிய நவீன சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த கல்வியாண்டில் சுமார் 5.32 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ரூ.277 கோடி மதிப்பீட்டில் சைக்கிள்கள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டர் கால அவகாசம் அக்டோபர் 13, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கு LILAC MIST நிறத்திலும், மாணவர்களுக்கு ARMY GREEN நிறத்திலும் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.
